புற்று நோய்
என்பது இன்று அதிகளவில் மக்கள் மத்தியில் பரவி வரும் நோய் வகையில் ஒன்று. அதிலும் முக்கியமாக பெண்களை தாக்கும்
இருவகை புற்று நோய்களில் மார்பக புற்றுநோயை
பற்றி பல பெண்கள் அறிந்திருப்பது குறைவு. இதனாலே பல பெண்கள் நகத்தால் கிள்ளி எறிய கூடிய
இந்நோயை முற்றவைத்து உடல் முழுதும் பரவ விடுகின்றனர்.
அதிலும் எம் முஸ்லீம் பெண்மணிகள் வைத்தியரிடம் காண்பிக்க வெக்கப்பட்டு கடைசியில் நோய்
முற்றியதும் செய்வதறியாது திணறுகின்றனர். மார்பகப் புற்றுநோயும், கருப்பை வாய் புற்றுநோயும் பெண்களை தாக்கும் நோய்களில் மிக முக்கியமானதாகும். உலக
அளவில் மார்பக புற்றுநோய் 11.5 லட்சம் பெண்களுக்கு உள்ளது. இதில் அமெரிக்காவில்
மட்டும் ஆண்டுக்கு 2.3 லட்சம் பெண்கள் பாதிக்கப்பட்டு இருப்பதாக புள்ளி
விவரங்கள் தெரிவிக்கின்றன. குறைந்த வயதிலேயே பூப்படைவதும், குழந்தைகளுக்கு பால் கொடுக்காமல் இருப்பதுமே பெண்களுக்கான
மார்பக புற்றுநோய் ஏற்பட முக்கிய காரணங்களாக கருதப்படுகிறது. 9-வயதுக்குள்ளே பெண்கள்
பூப்படைப்டைவதற்கு முக்கிய காரணம் அதிகளவில் ஈஸ்ட்ரோஜன் சுரப்பதால் தான். மேலும் 50
அல்லது 55 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு மாதவிடாய் ஏற்படுவது நிற்காவிட்டாலும் புற்றுநோய்
ஏற்படும் அபாயம் உள்ளது. மாதவிடாய் ஏற்படுவதற்கு
ஈஸ்ட்ரோஜன் முக்கிய காரணம் இந்த ஈஸ்ட்ரோஜன் அதிகமாக சுரப்பதன் காரணமாத்தான் புற்றுநோய்
செல்கள் தோன்றுகிறது.
முதலில் பெண்கள் மார்பகம் என்றால் என்ன என்பதை அறிந்திருத்தல்
வேண்டும். மார்பகம் என்பது லோப்ஸ் (lobes) எனப்படும் 6 முதல் 9 அடுக்கடுக்கான மடிப்புத் தொங்கு சதைகளானது. ஒவ்வொரு தொங்க
சதையும் லோப்யூல்ஸ் (lobules) எனப்படும்
பல சிறு இதழ்களைக் கொண்டு பாலைச் சுரக்கும் சில டஜன் சிறு முனைப் பகுதி குமிழ்களாக
முடியும். இத்தகைய மடிப்புத்தொங்கு சதைகள் சதைகள் சிறு இதழ்கள் முனைப் பகுதி குமிழ்கள்
அனைத்தையும் மெல்லிய இழை நாளங்கள் ஒன்றிணைக்கின்றன. இந்த இழை நாளங்கள் மார்பகத்தின்
நடுவிலுள்ள ஆரியோல் (areole) எனப்படும்
கரும் வட்டத்தின் நடுவிலுள்ள முலைக்காம்பில் ஒன்றிணைகின்றன. சிறு இதழ்களுக்கும் நாளங்களுக்கும்
இடையேயுள்ள இடைப்பகுதியைக் கொழுப்புப் பொருட்கள் நிறைக்கின்றன. மார்பகத்தில் சதைப்பற்று
ஏதும் இருக்காது. ஆனால் மார்பகத்தின் அடிப்பகுதியில் சதைப்பற்று இருந்து விலா எலும்புகளை
மறைக்கின்றன. ஒவ்வொரு மார்பகமும் இரத்த
நாளங்களையும் லிம்ப் (lymph) எனப்படும்
வர்ணமற்ற திரவத்தை எடுத்துச் செல்லும் நாளங்களையும் கொண்டுள்ளது. இந்த லிம்ப் நாளங்கள்
அவரை விதை வடிவிலுள்ள லிம்ப் நோட்ஸ் (Nodes )எனப்படும் முடிச்சுகளில் செல்லுகின்றன. இத்தகைய லிம்ப் நோட்ஸ்கள் கூட்டங் கூட்டமாக
அக்குகளின் மேழேயும் தோற்பட்டை எலும்புகளின் மேலும் மார்ப்கங்களிலும் உள்ளன. இத்தகைய
லிம்ப் நோட்ஸ் உடலின் மற்ற பல பாகங்களிலும் உள்ளன.
மார்பக புற்று நோய்
என்றால் என்ன?
மார்பக புற்று நோய்
என்றால், மார்பகத்தில் உள்ள
சில அனுக்கள் அளவுக்கதிகமாக வளர்வதாகும். புற்று அனுக்கள் மற்ற அனக்களைக் காட்டிலும்
பல வகைகளில் வேறுபட்டிருக்கும். அவை வேகமாகப் பிரிந்து வளர்ந்து சுற்றிலுமுள்ள இழைமங்களை
(tissues) ஆக்கிரமிக்கும்.
மார்பக புற்று நோயின்
அறிகுறிகள் என்ன?
துவக்க நிலை மார்பக
புற்றுநோய் சாதாரணமாக வலியை உண்டாக்காது. மார்பக புற்றுநோய் வளரத் தொடங்கும் போது எந்தவித
அடையாளமும்இ அறிகுறியும் இருக்காது. புற்றுநோய் வளர வளர கீழ்க்கண்ட அறிகுறிகள் ஏற்படும்.
1, வீக்கம் அல்லது மார்பகம் அல்லது அக்குள் பகுதி தடிக்கும்.
2. மார்பகத்தின் அளவும் வடிவும் மாறுபடும்
3. முலைக் காம்பிலிருந்த இரத்தமோ வேறு திரவமோ கசியும்.
4. மார்பகத்தின் தோல், கருப்பு வளையம், முலைக்காம்பு முதலியவற்றின் வண்ணம் மாறும். (குழிவிழுதல்,
மடிப்பு விழுதல், சொரசொரத்தல்)
5. சமீப காலமாக முலைக்காம்பு உள்ளிழுத்துக் கொள்ளும்.
பொதுவாக
மார்பக புற்றுநோயானது அம்மா, பாட்டி போன்றவர்களுக்கு, 50 வயதிற்கு முன்னரே மார்பக புற்றுநோயானது வந்தால், அவை நிச்சயம் அவர்களது குழந்தைகளுக்கு வரும்
வாய்ப்பு அதிகம் உள்ளது. சொல்லப்போனால், இதை ஒரு பரம்பரை நோய் என்றும் சொல்லலாம். ஆகவே இத்தகைய நோய் வருவதற்கு முன்பே, அதனை வராமல் தடுப்பதற்கான முயற்சிகளை
மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக, இந்த நோய் ஒருசில பழக்கவழக்கங்கள் மற்றும் அதனால் ஏற்படும் விளைவுகளின்
மூலமாகவும், மார்பக புற்றுநோய்
ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கிறது. உதாரணமாக, உணவுக்கட்டுப்பாடு இல்லாதால் உடல் எடை
அதிகரித்தல், புகைப்பிடித்தல், போதைப் பொருட்களை பயன்படுத்துதல்
போன்றவையும் மார்பக புற்றுநோயை அதிகரிக்கும்.
மார்பக
புற்றுநோயை தடுப்பதற்கான வழிமுறைகள்.
சூரிய ஒளி சிகிச்சை
தினமும் 3 மணி நேரம் சூரிய ஒளி உடல் மேல் பட்டால் மார்பக புற்றுநோய்
வரவே வராது என்கிறார்கள் கனடா நாட்டு ஆராய்ச்சியாளர்கள். இதுகுறித்து
ஆராய்ச்சியாளர்கள் கூறியதாவது: சூரிய ஒளி உடல் மேல் படும் போது வைட்டமின் டி
உற்பத்தி தூண்டப்படுகிறது. மார்பக செல்கள், வைட்டமின் டியை ஒருவித ஹோர்மோனாக மாற்றும் திறன் பெற்றவை.
இந்த ஹோர்மோன் தான் மார்பகத்தில் புற்றுநோய் வராமல் தடுக்கிறது. இளம், நடுத்தர மற்றும் வயதான பெண்களிடம் ஆய்வுகள் நடத்தப்பட்டு
இது கண்டுபிடிக்கப்பட்டது. தினமும் 3 மணி நேரம் சூரிய ஒளி உடல் மேல் படும் படி பார்த்துக்
கொண்டால் மார்பக புற்றுநோய் ஆபத்தில் இருந்து விடுபடலாம். ஆண்களை பொறுத்தவரை
வைட்டமின் டி மாரடைப்பு போன்ற ஆபத்துகளில் இருந்து காக்கிறதாம்.
உடற்பயிற்சி
தினமும் 30-45 நிமிடம் உடற்பயிற்சியை செய்தால், மார்பக புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு பாதியாக குறைகிறது. குறிப்பாக தினமும் 30 நிமிடம் நடைப்பயிற்சியை மேற்கொள்வது நல்லது.
தினமும் 30-45 நிமிடம் உடற்பயிற்சியை செய்தால், மார்பக புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு பாதியாக குறைகிறது. குறிப்பாக தினமும் 30 நிமிடம் நடைப்பயிற்சியை மேற்கொள்வது நல்லது.
எடை
உடலுக்கு தகுந்த எடை இல்லாமல் அதிகமாக இருந்தால், அதுவும் 18 வயதிலிருந்து சரியாக இல்லாவிட்டால், மாதவிடாய் சுழற்சி நிற்கும் நேரத்தில் மார்பக புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பும் அதிகம் உள்ளது. அதுமட்டுமின்றி, ஒரே நேரத்தில் அளவுக்கு அதிகமாக எடை அதிகரித்தால், அந்த நேரத்தில் ஈஸ்ட்ரோஜன் அளவு அதிகரித்து, புற்றுநோய் உண்டாகும்.

கொழுப்பு உணவுகள்
கொழுப்பு அதிகம் உள்ள எண்ணெய்களான சூரியகாந்தி எண்ணெய், சோள எண்ணெய் மற்றும் பல எண்ணெய்களை உணவில் சேர்த்து சமைத்து சாப்பிட்டால், புற்றுநோய் அபாயம் உள்ளது. எனவே உணவில் கொழுப்பு
கொழுப்பு அதிகம் உள்ள எண்ணெய்களான சூரியகாந்தி எண்ணெய், சோள எண்ணெய் மற்றும் பல எண்ணெய்களை உணவில் சேர்த்து சமைத்து சாப்பிட்டால், புற்றுநோய் அபாயம் உள்ளது. எனவே உணவில் கொழுப்பு
இல்லாத
எண்ணெய்களான ஆலிவ் ஆயில் போன்ற எண்ணெய்களை சேர்ப்பது மிகவும் நல்லது.
காய்கறி மற்றும் பழங்கள்
பழங்கள் மற்றும் காய்கறிகளில் கரோட்டினாய்டு அதிகம் உள்ளது. இவை புற்றுநோயை உண்டாவதைத் தடுக்கும் ஒரு சிறந்த பொருள். ஆகவே கரோட்டினாய்டு அதிகம் உள்ள உணவுகளை சாப்பிட வேண்டும். ஆனால் உடலில் கரோட்டினாடு குறைவாக இருந்தால், புற்றுநோய் உண்டாவதற்கான வாய்ப்பு இருமடங்கு அதிகம் உள்ளது. எனவே தினமும் பழங்கள் மற்றும் காய்கறிகளில், கேரட், தக்காளி, தர்பூசணி மற்றும் கீரைகள் போன்றவற்றை தவறாமல் சேர்ப்பது நல்லது.

சோயா பொருட்கள்
சோயா பொருட்களை அதிகமான அளவில் உணவில் சேர்ப்பதன் மூலம் மார்பக புற்றுநோயை தடுக்க முடியும். ஏனெனில் அதில் உளள பைட்டோ ஈஸ்ட்ரோஜன்கள், மார்பக புற்றுநோயை உண்டாக்கும் கிருமிகளின் தாக்கத்தை குறைத்துவிடும். எனவே பெண்கள் சோயா பொருட்களை அதிகம் உணவில் சேர்க்க வேண்டும்

தாய்ப்பாலின் அவசியம்
. இஸ்லாம் குழந்தை பிறந்து இரண்டு ஆண்டுகள் வரை தாய்ப்பால் . ஊட்டுவதை வலியுறுத்துகிறது. அதற்கு பல காரணங்கள்
உள்ளன, அதில் முக்கிய காரணங்களில் ஒன்று தான் இந்த புற்று
நோய் தடுப்பு. குழந்தைக்கு நிறைய தாய்ப்பால் ஊட்டும் பெண்களுக்கு புற்று நோய் வரும்
அபாயம் குறைவென ஆய்வுகள் கூறுகின்றன. இதை இஸ்லாம் 1400 வருடங்களுக்கு முன்னமே எமக்கு
அறிவித்துவிட்டது. மேலும் வேலைக்கு செல்லும் பெண்கள் தங்கள் குழந்தைகளுக்கு
காலை, மற்றும் இரவு நேரங்களில் மட்டுமே
பால் கொடுக்கின்றனர். இது போல் பால் கொடுக்கும் பெண்களுக்கும் மார்பக புற்றுநோய் வரும்
அபாயம் உள்ளது. எனவே இயன்ற அளவு தாய்ப்பால்
ஊட்டி குழந்தையின் அறிவு வளர்ச்சியை மட்டுமல்ல
எம் நோயெதிர்ப்பு சக்தியையும் கூட்டி கொள்வோம். இன்ஷா அல்லாஹ்
No comments:
Post a Comment