தண்டனை.....,⭐⭐⭐
ஒரு நிமிட கதை...
மாஹிரா .
10.33
சிறுவர் தின வாழ்த்துக்கள்💐💐💐
டீச்சர்....ஐந்தாவது முறை அவன் குரல் அவளுக்கு கேட்டது இருந்தும் அவள் அவனை நிமிர்ந்து கூட பார்க்கவில்லை. மறுபடியும் டீச்சர்... எனக்கு... அவன் குரல் கிணற்றில் இருந்து பேசுவதை போல கம்மியது. இவளும் ஒரு தாயல்லவா.. மனம் வலித்தது மெல்ல நிமிர்ந்து பார்த்தாள் அவன் கண்கள் கண்ணீரை பிரசவிக்க ஆயத்தமாய் இருந்தது. அவன் பிஞ்சு உதடுகள் கண்ணீரை அடக்க பற்களால் அழுத்தி பற்றப்பட்டிருந்தது. மூக்கின் ஓரம் துடித்துக்கொண்டிருந்தது. டீச்சர்... நா.. நான் மறுவா படிச்சி தார நேரம் குழப்ப மாட்டேன். நீங்க அடிச்சா பரவல்ல பேசாம இருக்க வானம். சொல்லி முடிக்கையிலே அவன் கண்களில் இருந்து துளி கண்ணீர் இவள் கைப்பையை தொட்டது. கருநீல கைப்பையில் அவன் கண்ணீர் துளி முத்தென மின்னியது. அவனை வாரி நெற்றியில் முத்தமிட அவள் மனம் துடித்தது, ஆனாலும் முகத்தை கொஞ்சம் கோபமாக வைத்துக்கொண்டு.... சரி ரிஹான் மறுபடி கொளபடி பண்ணினா நான் உண்மையா பேச மாட்டேன். சரியா? அவன் தலை இருபுறமும் மாறி மாறி ஆடியது. அவள் கைகள் அவன் கண்களை துடைத்துவிட்டு அவன் கொப்பியில் என்றுமில்லாமல் திகதியுடன் எழுதப்பட்ட கழித்தல் கணக்குகளை சரி பார்த்து மூன்று நட்சத்திரங்களை போட்டது. நட்சத்திர ஒளி அவன் கண்களில் மின்னியது..⭐⭐⭐
No comments:
Post a Comment